கோவை மாவட்டம் உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் யூசுப், இவருக்கு நேற்று திங்கட்கிழமை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் சென்று சோதனை மேற்கொண்ட பொழுது அந்த பகுதியில் சட்ட விரோதமாக குனியமுத்துரை சேர்ந்த 50 வயதான இமாம்தின் என்பவர் சுமார் 23 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அதனை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் ஒன்று, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.