புகையிலை, மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து,கோவை பி.பி.ஜி. பார்மசி கல்லூரி சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…
போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக அரசு, காவல்துறை ,மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக பி.பி.ஜி. பார்மசி கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக மது, புகையிலை, உள்ளிட்ட போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 61 வது தேசிய பார்மசி தினம் சார்பாக நடைபெற்ற பேரணியை பி.பி.ஜி. கல்வி குழுமங்களின் அறங்காவலர் அக்ஷய் தங்கவேல் துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் ஜீவானந்தம்,துறை தலைவர் பேராசிரியர் மது.சி.திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக போதை பொருள் பயன்படுத்துவதால் உள்ள தீமைகள் குறித்து மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்கள் தங்களது இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும், போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும், போதை பொருள் உபயோகிப்பதை தடுப்பதற்கும், அதனை ஒழிப்பதற்கும், மற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உறுதி மொழி ஏற்று கொண்டனர்.
பேரணியில்,கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் போதை பொருட்களால் உள்ள தீமைகள் குறித்த பதாககைளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.