கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் எம்.மே. கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தேங்காய் களத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியைச்சேர்ந்த வடிவேல் வயது 26 என்பவர் வேலை செய்து வந்த நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார்.
செடி வளர்ந்ததால் அதனுடைய மணம் அப்பகுதியில் பரவத் தொடங்கியது. இதை அறிந்த சிலர் நெகமம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த நெகமம் காவல்துறை
சம்பவ இடத்திற்கு விரைந்து ஒன்றரை கிலோ எடையுள்ள கஞ்சா செடியை பறிமுதல் செய்ததோடு வடிவேலையும் கைது செய்தனர்.
விசாரணையில் வடிவேல் தனது சொந்த பயன்பாட்டுக்காக வளர்த்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறை இந்தத் தகவலில் நம்பகத்தன்மை இல்லை என தெரிவிக்கின்றனர். மேலும் காவல்துறையினர் கஞ்சா செடி வளர்க்க விதை எங்கிருந்து கிடைத்தது..? யார் கொடுத்தது..?
என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் கஞ்சா விற்பனை சரிந்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பயன்பாட்டுக்கு வராததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய கஞ்சா செடியை சாகுபடி செய்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.
-M.சுரேஷ்குமார்.