போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள்.
தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 22 வார்டு அஸ்தினாபுரம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள்.
மாடுகள் கூட்டம் தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருமலை நகர் பிரதான சாலையில் தொடங்கி ராஜேந்திர பிரசாத் ரோடு வரை நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் அஸ்தினாபுரம் பகுதியில் போக்குவரத்து நிறைந்த பகுதிகளான ராஜேந்திர பிரசாத் ரோடு, வினோபாஜி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, திருமலை நகர் பிரதான சாலை ,உள்பட பல தெருக்களிலும் மாடுகள் கூட்டம் கூட்டமாக நடுரோட்டில் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமாக உள்ளது.
அபராதம் இந்த மாடுகளின் உரிமையாளர்கள் யார் எங்கிருந்து வருகின்றன என தெரியவில்லை. நடுரோட்டில் கூட்டமாக நின்று கொண்டும், படுத்துக் கிடக்கும் இந்த மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி பலமுறை நடவடிக்கை எடுத்தும் மாடுகளின் உரிமையாளர்கள் கண்டு கொள்ளவில்லை.
எனவே தாம்பரம் மாநகராட்சி போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அடைத்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.