கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை முழுவதுமாக அழிக்க அதிரடியாக கோவை காவல்துறை வாகன சோதனை மற்றும் ரோந்து பணியை தீவிரப் படுத்தி இது போன்ற சமூக விரோதிகளை கைது செய்து போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவை போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் நடேசன் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர்கள் தாமரைக்கண்ணன் மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் போத்தனூர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது சந்தேகிக்கும் படி நின்றிருந்த நபர்களை பிடிக்க முயற்சிக்கும் பொழுது அந்த மர்ம நபர்கள் போலீசாரின் கையில் இருந்து நழுவ பார்த்தார்கள். ஆனால் திறமையுடன் போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர்கள் தாமரைக்கண்ணன் மற்றும் ரியாஸ்கான் மர்ம நபர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
போத்தனூர் சேர்ந்த அப்துல் ரஹீம், மைல்கல் பகுதியைச் சேர்ந்த அபுதாஹீர், போத்தனூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த முகமது யூசுப் ஆகியோர்களிடம் இருந்து 2500 போதை மாத்திரைகள் மற்றும் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போத்தனூர் பகுதிகளில் உள்ள இளைஞர்களை குறி வைத்து இது போன்ற போதை கும்பல் செயல்பட்டு வருவது ஆபத்தானது என்று கூறும் சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தயவு தட்சணை இல்லாமல் எந்த அரசியல் பின்பலம், இயக்கம், மதம், சார்ந்த எந்த பின்பலங்கள் இருந்தாலும் அதையெல்லாம் அப்புறப்படுத்தி அவர்களை தண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர் திரு தாமரைக்கண்ணன் அவர்கள் கூறுகையில்:-
“எங்களுடைய தலைமை காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நாங்கள் போத்தனூர் பகுதிகளில் ரோந்து செல்வது வழக்கம். அதே போன்று தான் நாங்களும் தொடர்ச்சியாக ரோந்து பணியை மேற்கொண்டு வந்தோம். அப்பொழுது போத்தனூர் பகுதியில் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தீவிர ரோந்து பணியை மேற்கொண்டோம். அப்பொழுதுதான் இந்த மூன்று நபர்களும் எங்களிடம் பிடிபட்டார்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் அந்த போத மாத்திரையை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் எடுத்து நரம்பில் செலுத்தி கொண்டு ஒரு விதமான போதையை அனுபவிப்பதாக கூறினார்கள். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பறிமுதல் செய்துள்ளோம் இது சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்று கூறினார்.
போத்தனூர் போலீசாரின் நடவடிக்கைக்கு போத்தனூர் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செய்யத் காதர்,குறிச்சி.