கோவை அடுத்து சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இளம் பெண் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு மாஸ்டராக வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
கணவர் வீட்டில் இல்லாத நேரம் அந்த வாலிபரும் இந்த இளம் பெண்ணும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்தக் கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் அந்த இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது அவர் தனது மனைவியிடத்தில் இது போன்று நடக்க கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவன் மனைவிக்கு இடையே இந்த விவகாரம் தொடர்பாக தகராறு அடிக்கடி ஏற்பட்ட காரணத்தினால் அந்த மாஸ்டர் உடன் அந்த இளம் பெண் ஓட்டம் பிடித்தார். மனைவியை கண்டுபிடித்து தருமாறு போத்தனூர் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போன மனைவியை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போத்தனூர் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
இது போன்ற அருவருப்பான கலாச்சாரம் நம் மக்களிடையே அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது தனி மனித ஒழுக்கம் சீர்கெடும்போது இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க அனைவரும் தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அபு. போத்தனூர்.