கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் இயங்கி வரும் செல்போன் கடைகளில் நேற்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணம் மற்றும் செல்போன்களை களவாடி சென்றது அந்தப் பகுதி மக்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசன் தியேட்டர் அருகில் உள்ள கடை மற்றும் முத்தையா நகரில் இயங்கி வரும் கடைகளிலும் இதுபோன்ற திருட்டுகள் நடைபெற்றுள்ளதால், காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கடை நடத்துவோர் புகார் அளித்துள்ளனர்.
திருடப்பட்ட செல்போனின் மதிப்பு சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா, சையது காதர் குறிச்சி.