கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் முதல் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் மனோஜ்குமார், குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம், குமரகுரு நிறுவனங்களின் இணை நிருபர் சங்கர் வாணவராயர், குமரகுரு கல்லூரி முதல்வர் டாக்டர் விஜிலா எட்வின் கென்னடி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் தலைமை உரையை ஆற்றியபோது,
சிறந்து விளங்குவதன் மூலமும், மாற்றம் மற்றும் வளர்ச்சியின் உயர் கட்டமைக்கப்பட்ட உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலமும் சுயமாகச் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.