கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தலமான மூணார் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் குறண்டி காடு என்ற பகுதியில் வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு யானை சவாரி நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் திருச்சூரைச் சார்ந்த விமல் என்பவரும் அவருடன் வேலை செய்பவரான மணிகண்டன் என்பவருக்கும் வேலை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மீண்டும் தொடரவே கையில் வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து மணிகண்டன் என்பவர் விமல் என்பவரை கத்தியால் குத்தியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற மூணார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லாமல் விமல் என்பவர் இறந்துள்ளார். போலீசார் இதை பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.