கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியை சுற்றிலும் அதிகமான தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு தமிழ் வழிக் கல்வியும் மலையாள வழிக் கல்வியும் கற்றுத் தரப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கேரளாவில் மூணார் பகுதியில் தமிழ் வழி கல்வி பள்ளிகள் அமைந்தாலும் அதிகமான முக்கியத்துவம் மலையாள கல்விக்கு கொடுக்கப்படுகின்றன.
இதனால் தமிழ் வழி கற்றுக் கொடுக்கும் பள்ளிகளில் போதிய கூடுதல் கட்டிடங்கள் இல்லாமையும் சரியான சீரமைப்புகள் இல்லாததினாலும் தமிழ் வழி கல்வி ஆனது சற்று குறைந்து கொண்டே வருகின்றது. அது மட்டுமல்லாது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அதிக தூரம் செல்ல வேண்டி இருப்பதால் அங்கு வசிக்கும் தமிழ் மக்களின் குழந்தைகள் வெளியே சென்று கல்வி கற்க நேரிடுகிறது.
நேற்று ஒரு விழாவிற்கு வந்த கல்வி அமைச்சர் சிவன் குட்டி அவர்கள் கூறியதாவது “மூணார் பகுதிகளில் தமிழ் வழிக்கல்விக்கூடங்கள் மேம்படுத்தப்படும் மற்றும் சீரமைத்து தரப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
–ஜான்சன் மூணார்.