மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று கோவை வருகை தந்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் IPS அவர்களை சந்தித்தார். அவருடன் இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, மாநிலச் செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, ஆகியோரும் உடனிருந்தனர்.
மேற்கு மண்டலத்தில் அமைதி மற்றும் இணக்கப்பாடுகள் குறித்தும், சமீபத்திய விரும்பத்தகாத நிகழ்வுகளின் பதட்டத்தை தணிப்பது குறித்தும் அவரிடம் பேசப்பட்டது. இப்பகுதியில் சமூக நல்லிணக்கம் வளர மஜக சார்பில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதையும் பொதுச் செயலாளர் எடுத்துக் கூறியதும், அது நல்ல முயற்சி என்று வரவேற்று அதற்கு ஒத்துழைப்புகள் இருக்கும் என்றும் ஐ.ஜி கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் அனிபா, SA.ஜாபர் சாதிக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.