கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட தோடதாசனூர் பகுதியில் இன்று காலை சுமார் 7 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று நாய்கள் துரத்தி வந்த நிலையில் ஊருக்குள் புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் நாயை விரட்டி அடித்து மானை காப்பாற்றினார். மானுக்கு பல்வேறு பகுதியில் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது, இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு மூன்று மணி நேரம் கழித்து வந்த நிலையில், மான் சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிரிழந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்; “நாங்கள் தகவல் தெரிவித்த நேரத்தில் வனத்துறை வந்திருந்தால் மானுக்கு முதலுதவி செய்து எப்படியாவது காப்பாற்றி இருக்கலாம், இது வனத்துறை அலட்சியத்தால் உயிரிழந்தது” என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.