கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் புதிய கார்களை வாங்க ஆசைப்படும் வாடிக்கையாளர்களுக்கு கார்களை அவர்கள் இடத்திற்கே சென்று காண்பிக்க ஏஜென்சியாளர்கள் வாகனங்களை கொண்டு செல்வது வழக்கம். இப்படி மாதிரிக்காக கொண்டு செல்லும் வாகனங்கள் வாடிக்கையாளர்கள் கார்களை ஓட்டி பார்த்த பின்னர் மீண்டும் காரில் உள்ள மீட்டர் ஸ்பீடோமீட்டர் கேபிள்களை மாற்றி அதை விற்பனை செய்து வந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. பீரி மேட்டில் இவ்வாறு மாதிரிக்காக கொண்டு வந்த காரில் மீட்டர் மாற்றப்பட்டுள்ளது அங்குள்ள சிறப்பு காவல் அதிகாரியான அணில் குமார் அவர்களின் தலைமையிலான குழுக்கள் கண்டுபிடித்துள்ளனர். காஞ்சிரப்பள்ளி ஹூண்டாய் ஷோரூமில் இருந்து குமுளிக்கு கொண்டு வந்த காரில் மாதிரி காண்பித்த பின்பு வருகின்ற வழியிலேயே கோட்டயத்தின் அருகில் ஸ்பீடோ மீட்டர் எடுத்து மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சட்ட விரோதமாக வாடிக்கையாளர்களை ஏமாற்றி பல கார் ஷோரூம்கள் விற்பனை செய்வதாக குறிப்பிடப்பட்ட வதந்திகள் தற்பொழுது உண்மையாகி உள்ளது. எனவே கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சற்றே எல்லாவற்றையும் சரிபார்த்து கார்களை கவனமாக வாங்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.