கோவை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் அக்கட்சியினர் மாநகர காவல் ஆணையாளரிடம் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில்;
“மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து கோவையில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மேலும் சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி இல்லை எனவும் சமீபத்தில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது. இதனை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சமூக நல்லிணக்கத்திற்கு மங்களூர் சம்பவம் ஒரு அச்சுறுத்தலானது எனும் எனவும் இந்த விவகாரத்தில் மத , மொழி பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் அவசியம் இல்லாதது. மேலும் குறிப்பாக விளம்பர மேனியா நோயால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளார். கவர்னர் ஒரு இணை அரசாங்கம் நடத்த நினைக்கிறார். தமிழ்நாட்டுக்கு கவர்னர் நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மக்கள் ஆதரவு பெற முடியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மூலம் தமிழகத்தில் நுழைய நினைக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வட மாநிலங்களில் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளன. என்.ஐ.ஏ என்ற பெயரில் சிறுபான்மையினரை குற்றப்பரம்பரையாக்க பார்க்கிறார்கள்.” என தெரிவித்தார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.