கோவை ஆலாந்துறை அருகே 1000ம்ஆண்டுகள் பழமையான கருப்பராயர் சிலை மாயம்.மக்கள் கவலை!!!
ஆலாந்துறை அடுத்த நல்லூர் வயலில் உள்ள பழங்குடி கிராமத்தில் சுற்றுவட்டார 7 கிராமத்திற்கு சொந்தமான குல தொய்வம் சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் இந்த கோவிலில் அந்த 7 கிராமங்களும் விஷேச நாட்களில் சிறப்பு வழிபாடு செய்து வந்தனர். மேலும் அந்த கோவிலில் செய்யப்படும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பழங்குடி கிராம மக்களின் நம்பிக்கை.
அந்த கோவிலில் விநாயகர், மற்றும் கருப்பராயன் சிலையும் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவிலில் விளக்கேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று வழக்கம் போல கோவிலுக்கு ஊர் மக்கள் சென்ற போது அங்கிருந்த சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2.5 அடி கருப்பராயர் கற்சிலை மாயமனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஒன்று கூடினர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஆலாந்துறை மற்றும் காருண்யா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக சுற்றுவட்டார கிராம மக்களிடம் விசாரித்து வருகின்றனர். மிகவும் நம்பிக்கைக்கு உரிய கோவிலில் கருப்பராயன் சிலை மாயமானதால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.