கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதிகளின் ஒரு பகுதியானச் சொக்க நாடு எஸ்டேட் சவுத் டிவிசனில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு வயிருவலி ஏற்பட மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில் ஒரு அதிர்ச்சியான தகவல் மருத்துவரால் கூறப்பட பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர் .
குழந்தை பாலியல் ரீதயாக துன்புறுத்த பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து குழந்தைகள் உதவி மையம் மூலமாக புகார் அளிக்கப்பட்டு தேவிகுளம் காவல் துறையினர் விசாரணையை துவங்கினார்.
இந்த தொடர் விசாரணையில் 56 வயது வேலுசாமி மற்றும் 19வயது உடைய முகேஷ் என்பவரும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. உடனடியாக இரண்டு நபரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.