ஆக்கிரமிப்புகளை அகற்றுமா தாம்பரம் மாநகராட்சி!!!
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 2இல், 26 வது வார்டில் சாந்தி நகர், ரேஷன் கடைக்கு எதிரில் உள்ள பொதுப்பணித்துறை வாய்க்காலின் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு செல்ல வாய்க்காலின் மீது சிறு பாலம் அமைத்து இருந்தனர். அந்த சிரிப்பாலத்தின் மீது ஒரு வாகனம் (கார்) நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அந்த சிறு பாலம் காருடன் இடிந்து வாய்க்காலில் விழுந்து உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பொதுப்பணித்துறை வாய்க்கால், பல்லாவரம் பெரிய ஏரியின் உள்வாயில், செங்கல்பட்டு மாவட்ட, பொதுப்பணித்துறை (கீழ் பாலாறு உபகோட்ட) துணைப் பொறியாளர் கண்காணிப்பில் உள்ளது. இந்த இடத்தை 2020 ஆம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான் லூயிஸ் இ.ஆ.ப. அவர்களின் உத்தரவின் பெயரில் ஆகஸ்ட் 2020இல் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அவற்றை குறியிட்டு (Mark) ஆக்கிரமிப்பு அகற்றுவதாக தெரிவித்தனர், ஆனால் இன்றுவரை இந்த ஆக்கிரமிப்புகள் பொதுப்பணி துறையின் செயல்படாத துணைப் பொறியாளர் மற்றும், வட்டார அரசியல்வாதிகளின் குருக்கீட்டாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருக்கின்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. அ. ராகுல்நாத் இ.அ.ப. அவர்கள் இதில் உடனடி கவனம் செலுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆக்கிரமிப்பு அகற்ற (இந்த வாய்க்காலின் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும்) உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.