கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை முக்கோணத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கண்காணித்தனர் அப்பொழுது கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் ( 28 ) என்பதும், பையில் 600 கிராம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-M.சுரேஷ் குமார்.