கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் அடுத்த, பாரதியார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி 37 வயதான ராதா, இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தோஷ் பில்டிங் ஒர்க் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதற்காக இவர் பல்வேறு வங்கிகளில் லோன் வாங்கியதாக கூறப்படுகின்றது.
மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக இவரது தொழிலை இவர் நிறுத்தியுள்ளார். மேலும் கடன் வாங்கிய வங்கிகள் இவரை கடனை திருப்பி செலுத்த பல்வேறு நெருக்கடிகளை தந்துள்ளனர். இதனால் மன விரக்தியில் காணப்பட்ட ராதா, நேற்று வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இது குறித்து இவரது கணவர் குணசேகரன் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காணாமல் போன ராதாவை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.