இளநிலை மின்வாரிய அலுவலகம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் அமைத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
கன்னியாகுமாரி மாவட்டம், தோவாளை தாலுகா, பூதப்பாண்டி மேலரதவீதியில் பாழடைந்த பராமரின்றி காணப்படும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியினை அகற்றி அந்த இடத்தில் புதிதாக இளநிலை மின்வாரிய அலுவலம் மற்றும் உதவிமின் பொறியாளர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் மின்வாரிய கட்டிடத்தை கட்டுவதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதன் பின்னர் கட்டுமான பணி தொடங்குவதற்கான முதல் பணியான மண்பரிசோதனையும் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கன்னியாகுமாரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட
துணைச் செயலாளர் எஸ்.நாராயணசாமி கூறுகையில்; “கட்டுமானபணிக்கு மூன்று முறை மதிப்பீடு தாயார் செய்து செயல் இழந்த நிலையில் நான்காவது முறையாக ருபாய் 91,00,000 /.மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழகஅரசு பூதப்பாண்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலன்கருதி பூதப்பாண்டி மேலரதவீதியில் நிரந்தரமாக மின்சாரத்துறை கட்டிடத்தை கட்டுவதற்கு மின்சாரத்துறையால் வாங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலான ஆதிதிராடவர் மாணவர் விடுதியை அகற்றி அந்த இடத்தில் புதிதாக நிரந்தரமாக மின்வாரிய அலுவலகம் கட்டுவதற்கு போர்க்கால அடிப்படையில் நிதி அனுமதியினை வழங்கி மின்வாரிய கட்டிடப்பணியினை ஆரம்பித்திட பூதப்பாண்டி ஊர்மக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் சார்பிலும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.