ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் பயணம் செய்யும் போது, குகைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகு, வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru
இந்தநிலையில் நேற்று அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆஷிஷ் என்பவர் தனது சொந்த நாடான பூட்டானில் இருந்து உறவினர்கள் 13 பேருடன் மலை ரெயிலில் வந்தார். இவர் ரூ.4.80 லட்சம் கட்டணம் செலுத்தி தனியாக மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பூட்டான் நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரெயில் நேற்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு குன்னூரை வந்தடைந்து. ரெயிலில் பூட்டானை சேர்ந்த 13 பேர் வந்திறங்கினர். பின்னர் அவர்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.