ஒட்டப்பிடாரம் அருகே காமநாயக்கன்பட்டியில் புதிய மின்மாற்றி திறப்பு விழா!!!
ஒட்டப்பிடாரம் அருகில் காமநாயக்கன்பட்டியில் நீர் உந்து நிலையத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கும் மின்மாற்றியினை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், காமநாயக்கன்பட்டி நீர் உந்து நிலையம் மூலம் விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியங்களில் உள்ள 239 கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ.60 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் 4-கிலோமீட்டர் தொலைவிற்கு உயர் மின்னழுத்த மின்பாதை மற்றும் புதிய மின்மாற்றி அமைத்து 24-மணி நேரமும் ஒட்டப்பிடாரம் அருகே காமநாயக்கன்பட்டி நீர் உந்து நிலையத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கும் மின்மாற்றியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
விழாவல் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சாகர்பான் உதவி செயற்பொறியாளர்கள் மிகாவேல், குருசாமி, முனியசாமி, தங்கராஜ், முருகேஸ்வரன், மாரீஸ்வரன் கயத்தார் ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.