கோவை, கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜான்சன் கல்லூரி அருகே உள்ள சர்வீஸ் சாலையில், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, போலீஸ் எஸ்ஐ போல் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார், அவர் காவல் துறையினர் போன்று சீறுடையுடன் நின்று கொண்டு வாகன தனக்கை செய்துள்ளார், இதனால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து சசிகுமார், இது குறித்து உடனடியாக, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில், புகார் தெரிவித்தார்,
அதன் பேரில் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்தபோது கருப்பு நிற புல்லட் வாகனத்தில் உதவி ஆய்வாளர் சீருடையில் வந்த நபரை நிறுத்தி விசாரிக்க அவர் விருதுநகரை சேர்ந்த செல்வம் என்றும் தற்சமயம் கருமத்தம்பட்டியில் தங்கி இருப்பதாகவும் ஸ்பின்னிங் மில் ஒன்றில், வேலை செய்து கொண்டு செல்வம் என்பவர் உதவி ஆய்வாளர் போல, போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை,
திருப்பூர், ஈரோடு, பகுதியில் வாகனத்தை தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார், இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.