கிக்பாக்ஷிங் இல் சாதனை படைத்த மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!!
கோவை குனியமுத்தூர் பகுதியில், கடந்த 8 ஆண்டுகளக, பிரேம் எம்எம்ஏ அகாடமி சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிக்பாக்ஷிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மையத்தில் கிக்பாக்ஷிங் பயின்ற சுமார், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளனர். அந்த வகையில் பிரேம் எம்எம்ஏ அகாடமியில் கிக்பாக்ஷிங் பயிற்சி பெறும் நாண்கு மாணவர்களான, 18 வயதான கெளதம், 15 வயதான ஆதி கிருஷ்ணா, 26 வயதான விக்னேஷ், 13 வயதான ஹரிஷ் ஆகியோர், கோவை குனியமுத்தூர் பகுதியி்ல், உள்ள ஆர்கேவி பள்ளியில் காலை 6 மணிக்கு இரண்டு கைகளிலும் கிக்பாக்ஷிங் செய்து கொண்டே ஒரு மணி நேரத்தில், 10 கிலோ மீட்டர் தூரம் கடந்து சாதனை படைத்தனர்.
இந்த உலக சாதனையை அங்கீகரித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் நாண்கு மாணவவர்களுக்கும் அதற்கான சான்றிதல்களையும், பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி துணைமேயர் வெற்றி செல்வன், பரிசுகளை வழங்கினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இந்த நிகழ்வில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், பிரேம் எம்எம்ஏ அகாடமியின் நிறுவனர் பிரேம், அன்ட்லி ப்ளாக் பெல்ட் ஆகாடமி நிறுவனர் ஆனந்தகுமார், ஆர்கேவி பள்ளியின் மேளாளர் தர்மகண்ணன் என பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
One Response
Congratulations my dear students 💕💕💕💕