கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி..???….
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்டது
சின்னாம்பாளையம். இவ்வூரில் தனியாருக்கு சொந்தமாக வீட்டுக் கிணறு உள்ளது. இக்கிணர் சுமார் 34 அடி ஆழமுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த கிணற்றில் சுமார் 24 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்துள்ளது.
இந்த கிணத்தில் டிசம்பர் 29ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் மூதாட்டி தவறி விழுந்துள்ளார். இதை அறிந்தவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்து பொள்ளாச்சி தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் கணபதி அவர்கள் தலைமையில் சுமார் 34 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் மூதாட்டியை உயிருடன் மீட்டதற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.