கோவையில் பரபரப்பு!! – ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினியர் தற்கொலை!!
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் R L V நகரை சேர்ந்த என்ஜினீயர் ஆன சங்கர் ( 29 )
ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்த நிலையில் ஆரம்பத்தில் வருமானம் வந்தாலும் நாளடைவில்
தான் சேர்த்து வைத்து இருந்த மொத்த பணத்தையும் இழந்துள்ளார்.
இந்நிலையில் எப்படியாவது ஆன்லைன் சூதாட்டத்தில் விட்ட பணத்தை திருப்பி எடுத்து விடலாம் என்ற முயற்சியில் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடன் வாங்கிய பணத்தையும் இழந்துவிட்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் மன வேதனையுடன் இருந்த சங்கர் கடந்த 12-ந் தேதி தனது பெற்றோரிடம் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்வதாக கூறி விட்டு கோவை ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அறையில் தனியாக இருந்த சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காட்டூர் காவல் துறைக்கு ஹோட்டல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட அறையில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் சங்கர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர் ஆன்லைனில் எவ்வளவு பணத்தை இழந்தார் என்பதையும் நண்பர்களிடம் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதையும் குறிப்பிடவில்லை.
தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.