கோவை:
கோவை ராஸ்மாதாஸ் குழுமம் நடத்திய மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில், 21 வயதான அக்ஷதா தாஸ் மிஸ் தமிழ்நாடு 2023 ஆக முடிசூட்டப்பட்டார். டாக்டர் தளிகா 1வது ரன்னர் அப் மற்றும் சுபிக்ஷா 2வது ரன்னர் அப் என அறிவிக்கப்பட்டனர். பெகாசஸ் ஈவெண்ட் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு கோவையை சேர்த்த பெண்கள் பங்கேற்றனர்.
ராஸ்மாதாஸ் குழுமத்தின் நிறுவனர், ஜோ மைக்கேல் பிரவீன் மற்றும் பெகாசஸ் குளோபல் உரிமையாளர் அஜித் ரவி மற்றும் கோவையிலிருந்து அழைக்கப்பட்ட பல தொழிலதிபர்கள், குடும்பத்தினர் மற்றும் பேஷன் பிரியர்களுடன் கலந்து கொண்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போட்டியாளர்களின் சுயவிவரம் மாறுபட்டதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. வழக்கறிஞர், தொழில்நுட்ப வல்லுநர்கள்,மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், தொழிலதிபர், பதக்கம் வென்ற கூடைப்பந்து வீரர், ஒரு தர ஆய்வாளர், உணவு வேதியியலாளர் போன்ற ஒரு சிலரை குறிப்பிடலாம்.
இந்நிகழ்வின் போது தொழில் விருதுகள் 2022 வழங்கப்பட்டது. நிகழ்வில் எமரால்டு குழுமத்தின் தலைவர் கே.ஸ்ரீனிவாசன் சிறந்த உற்பத்தியாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது வழங்கப்பட்டது.
சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கான விருதை குளோபஸ் ரியல் எஸ்டேட் தலைவர் சிவக்குமார் பெற்றார். வால்கிளிஃப்ஸ் சட்ட நிறுவனத்தின் மகேஷ் குமார் சிறந்த கார்ப்பரேட் வழக்கறிஞர் விருதைப் பெற்றார். நகரின் பிரபலமான சீன உணவகங்களில் ஒன்றான Ninhao சிறந்த சீன உணவகத்திற்க்கான என்று வில்லியம் பெற்றார். டார்சா ரிசார்ட் சிறந்த சொகுசு ரிசார்ட் விருதைப் பெற்றார்.
– சீனி, போத்தனூர்.