கோவை நவஇந்தியா பகுதியில் கோவை.கோ நிறுவனம் தனது அலுவலகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
கோவை.கோ நிறுவனம் இந்தியாவில் கோயம்புத்தூர் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் ஆகிய இடங்களில் உள்ள முதன்மையான மென்பொருள் மற்றும் பி 2 பி சாஸ் நிறுவனமானது, கோயம்புத்தூரில் 4,500 சதுர அடி அலுவலக இடத்தைத் திறந்துள்ளது.
தொடக்க விழாவில் கிஸ்ஃப்ளோவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம் கலந்து கொண்டார். புதிய நிறுவனத் தொடக்க விழாவில் கோவை டாட் கோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியுமான சரவணகுமார் கூறுகையில்,
“தனிப்பட்ட குழுவாக செயல்படுபவர்கள் மற்றும் பங்குதாரர்கள் மனதில் பணிபுரியும் இடத்தில் உள்ளவர்கள் எளிதாக பணியாற்றுவதற்கு தேவையான சூழலை உருவாக்குவோம் என்ற வலுவான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த அலுவலகத்தை பார்க்கும் போது கோவை டாட் கோ நிறுவனம் சிறந்த பொருளை தயாரிக்க முடியும். இதன் மூலம் எங்கள் தரத்தை உணர முடியும்.”என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.