ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணையவுள்ளார். நேற்று அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்தும் அவர் கூறுகையில்; “திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், விரைவில் நல்ல முடிவு எடுப்பேன், இதுபோன்று அரசியலை விட்டு விலகமாட்டேன், ஆனால் துரோகிகளோடு சேர்ந்து ஒருநாளும் பணியாற்றமாட்டேன்” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் இணையவுள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.