கோவை பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக காதம்பரி 2023 இசைக்கச்சேரி விழா வரும் ஜனவரி 5 ஆம் தேதி துவக்கம்…
பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் காதம்பரி எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதன் படி இந்த ஆண்டிற்கான காதம்பரி கலை நிகழ்ச்சி விழா வரும் ஜனவரி 5 ஆம் தேதி துவங்கி 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐ.எம்.எஸ்.அண்ட் ஆர் ஆடிட்டோரிய அரங்கத்தில் நடைபெற இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.இதில் பி.எஸ்.ஜி. பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன், பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியின் கர்நாடக இசை துறை தலைவர் முனைவர் விஜய ஜெயா, பி எஸ் ஜி பள்ளிகளின் செயலாளர் நந்தகோபாலன்,ஊடக தொடர்பு மேலாளர் உமா செங்கதிர் ஆகியோர் பேசினர்.. கடந்த இரண்டு வருட கொரோனா இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் காதம்பரி இசை நிகழ்ச்சி நடைபெறுவதாகவும்,இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளின் இசை திறன்களை வளர்க்கும் விதமாக பி.எஸ்.ஜி.பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் முதல் நாளான அன்று திரைப்படங்களில் பிரபலமான கர்நாடக இசை சார்ந்த பாடல்கள் தொகுப்பாக திரை ராக கதம்பம் எனும் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும்,இரண்டாம் நாளன்று பிரபல கடம் கார்த்திக்கின் இசை கச்சேரியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் கலைஞர்கள் தீப்தி சுரேஷ்,சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்..தொடர்ந்து மூன்றாம் நாள் ஜன்னல் ஓரப்பயணம் எனும் சிக்கில் குருசரண் குழுவினரின் நிகழ்ச்சிகள்,நான்காம் நாள் முழுவதும் கர்நாடக இசை கச்சேரி மற்றும் யுவா கலா ரத்னா விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் மாலையில் துவங்கும் இந்நிகழ்ச்சியில் அனுமதி இலவசம் எனவும் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.