சிங்கம்புணரியைச் சேர்ந்த சிறுமி, எட்டயபுரம் அருகே நடந்த விபத்தில் பலி!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி செட்டியார் தெருவில் வசிக்கும் மணி
என்பவரது குடும்பத்தினர் 7 பேர் கடத்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர். வாகனத்தை சிங்கம்புணரி பாரதி நகரைச் சேர்ந்த பாண்டி (வயது 53) என்பவர் ஓட்டியிருக்கிறார்.
வாகனம் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள துரைசாமிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மணியின் மகள் கயல்விழி (வயது 14) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டயபுரம் காவல்துறையினர் சிறுமி கயல்விழியின் உடலை மீட்டு, பிணக்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பிரபா என்பவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.