திருப்பத்தூர் தாலுகாவிலிருந்து சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகள் பிரிக்கப்பட்டு சிங்கம்புணரியை தலைநகராக கொண்டு தனி தாலுகா 2016ல் நிறுவப்பட்டது. அதன் பின்பு சிங்கம்புணரி தாலுகாவுக்கான மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குச் சொந்தமான நகர்மன்றத்தில் 2019ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2022-2023ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது.
தலைவராக பழ.துரைவேலவன், செயலாளராக ராஜேஸ், பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழ.துரைவேலவன், தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்கும் சக வழக்கறிஞர்களும், உறவினர்களும், நண்பர்களும் மகிழ்வுடன் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.