தடாகம் சாலையில் திடீர் பள்ளம்! அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!!
கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி, பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு இரண்டு அடிக்கு சாலையில் குழி விழுந்தது, இதனால் அந்த சாலையில், இன்று காலை முதலாக, கனரக வாகனங்கள், பேருந்துகள் பயணம் மேற்கொள்ள முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர், இதனால் அந்த பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என பலதர பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய. அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை அமைப்பின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் புஷ்பானந்தம் கூறும் பொழுது.
“கோவை தடாகம் சாலையானது ஜிசிடி கல்லூரியில் இருந்து கணுவாய் வரையிலும் சாலை மிகவும் பாதிப்படைந்து உள்ளது. இந்த சாலையில் கல்லூரிகள் பள்ளிகள் என பல உள்ளது, தினமும் இந்த சாலையை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவர்கள் என பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளால் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. அதனால் இந்த சாலை மிகுந்த சேதம் அடைந்துள்ளது. இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் அதிகாரிகள் குடிநீர் வாரிய பணிகளை காரணம் காட்டி சாலைகளை புதுப்பிக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தனர்.
தற்பொழுது குடிநீர் வடிகால் வாரிய பணிகள் அனைத்தும் முடிவு பெற்று ஒரு மாதங்கள் கடந்தும் நெடுஞ்சாலை துறையினர் இதுவரையில் இந்த சாலையை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர். எனவே இந்த சாலைகளை உடனடியாக புதுப்பித்து பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம், புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த சாலையில் ஏற்கனவே இரண்டு முறை பேருந்துகள் இது போன்ற சாலைகள் ஏற்பட்ட திடீர் பள்ளங்களில் சிக்கி பாதிப்படைந்துள்ளதாகவும், எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும், உடனடியாக புதுப்பித்து தரப்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், திவ்யா, மகேஷ்வரி, லட்சுமி, ஜெபா, சரண்யா, மோகன்ராஜா, லோகநாதன் என பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.