தமிழகத்தில் சிறந்த அரசுப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு!!!!
தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2020 – 21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதில், துாத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, கயத்தாறு ஒன்றியம் அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப் பள்ளி, ஆழ்வார்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நெல்லை மாவட்டத்தில், நான்குநேரி ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாப்பாக்குடி ஒன்றியம் நடுக்கல்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாளையங்கோட்டை புறநகர் ஒன்றியம் சீவலப்பேரி ஒன்றிய ஊராட்சிதொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் ஒன்றியம் கீழ்குளம் மேற்கு அரசு தொடக்கப்பள்ளி, குருத்தங்கோடு நெய்யூர் அரசு எல்.எம்.ஏ. தொடக்கப்பள்ளி, குளச்சல் ஒன்றியம் தோட்டிக்கோடு அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில், மேலநீலிதநல்லுார் ஒன்றியம் பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தென்காசி ஒன்றியம் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழப்பாவூர் ஒன்றியம் புல்லுக்காட்டு வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், தலா 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.