தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் நகர்ப்புற புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. இதன்படி மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையங்கள் கட்டுப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நகராட்சி நிர்வாக துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் திரூப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.