தூத்துக்குடியில் மாநகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பிருந்தாவன் ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. அதில் சினிமா டைரக்டர் ஹரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை, தூத்துக்குடி, ஆத்தூர், பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் மக்களின் பேராதரவைப் பெற்ற பிருந்தாவன் ஹோட்டல் தூத்துக்குடியில் விரிவாக்கத்துடன் பழைய பேருந்து நிலையம் எதிரில் பாலவிநாயகர் கோவில் தெருவில் பிகே டவர்சில் தொடங்கியுள்ளது.
திறப்பு விழாவில் திரைப்பட இயக்குநர் ஹரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஹோட்டல் ஆத்தூர் மணி குரூப்ஸ் நிறுவனங்களின் தலைவர் ம.தமிழ்செல்வன் திறந்து வைத்தார்.
திருமதி மாரியம்மாள் மணி குத்து விளக்கேற்றினார். பொதுமேலாளர் மாணிக்கசெல்வம் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் வணிகர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, ஹோட்டல் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில் ஆறுமுகம், செயலாளர் சுப்பு, பொருளாளர் பாலமுருகன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உதவி பொதுமேலாளர் பாலாஜி, வங்கி தெற்கு கிளை மேலாளர் கண்ணன், பிகே டவர்ஸ் உரிமையாளர்கள் அழகு, துரை, அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன் தூத்துக்குடி.