தேசிய ஜூனியர் குதிரைப்பந்தய போட்டியில்
கோவை மாணவர்கள் 8 பேர் பதக்கம் வென்று சாதனை
தேசிய ஜூனியர் குதிரையேற்ற பந்தய போட்டியில் கோவையை சேர்ந்த 8 மாணவர்கள் பங்கேற்று 9 பதக்கங்களை வென்றனர். சிறந்த குதிரையேற்ற வீரருக்கான பட்டத்தை திவ்யேஷ்ராம் பெற்றார். கோவையிலிருந்து பங்கேற்ற மாணவர்கள் 9 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இது குறித்து கோவை ஸ்டபிள் ஈகுட்டரிஸ் கிளப் பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் உள்ள குதிரையேற்ற அகாடமியில், அகில இந்திய அளவிலான தேசிய ஜூனியர் குதிரையேற்ற பந்தயப்போட்டி கடந்த 2022 டிசம்பர் 19 ல் நடந்தது. தேசிய அளவில் 400 பேர் பங்கேற்றனர். 450 குதிரைகள் பங்கேற்றன. 10 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்கின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை ஸ்டேபிள் ரைடர் கிளப் சார்பில் 10 குதிரைகளும், திவ்யேஷ்ராம், வாணியா கண்ணன், பிரதீப் கிருஷ்ணா, விக்னேஷ் கிருஷ்ணா, ஹர்ஷித், ஆரதனா ஆனந்த், ஆதவ் கந்தசாமி, ராகுல் ராஜேஷ் 8 மாணவர்களும் பங்கேற்றனர்.
அக்குமுலேட் என்ற போட்டியில், ஆரதனா ஆனந்த் தேசிய அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளார். டாப்ஸ்கோர் என்ற போட்டியில் ராகுல் நான்காம் இடம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவிலான சிறந்த குதிரையேற்ற பந்தய வீரர் பட்டத்தை திவ்யேஷ்ராம் பெற்றுள்ளார். இதில் , தனித்திறன்போட்டியில் திவ்யேஷ்ராம் தங்கம் வென்றார். குழுவிற்கான தங்கத்தை ஆதவ் கந்தசாமி வென்றார். ஆரதனா ஆனந்த், திவ்யேஷ்ராம், விக்னேஷ் கிருஷ்ணா, ஹர்ஷித் ஆகியோர் குழு அளவிலான வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.
also read ↓
https://nalaiyavaralaru.com/2022/12/கோவையில்-இரண்டு-வருட-இடை