கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் ஹை ரேஞ்ச் பகுதிகளில் வேலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஐ என் டி யு சி சார்பில் வைக்கப்பட்ட சம்பள உயர்வு பேச்சு வார்த்தையானது தோல்வியில் முடிந்துள்ளது. இதனைக் குறித்து மூணார் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏகே மணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது; “தேயிலை காபி ரப்பர் மற்றும் ஏலம் தோட்ட தொழிலாளர்களுக்கு சரியான சம்பள உயர்வு கிடைக்கவில்லை. இதனை கம்பெனிகளும் அரசும் கண்டு கொள்வதில்லை. இதனால் அனைத்து தோட்ட தொழிலாளர்களை ஒன்று சேர்த்து தீப்பந்தங்கள் ஏற்றியும் கம்பெனி அலுவலகங்களை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தப்படும்.” என குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்.
மூணார்.