நாளைய வரலாறு செய்தியின் எதிரொலி பூதபாண்டியில் குப்பைகள் அகற்றப்பட்டது
கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை தாலுகா பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பூதப்பாண்டியில் ப.ஜீவானந்தம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பகுதியில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உருவாக்கியுள்ளதை சுட்டிக்காட்டி நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
நமது செய்தியின் எதிரொலியாகவும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். நாராயணசுவாமி முயற்சியிலும் அப்பகுதி காலதாமதம் செய்யாமல் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதால் நோய் பரவும் அச்சத்தில் இருந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.