நீரேற்று நிலையத்தில் திடீரென குளோரின் வாயு
கசிவு – பதட்டத்தில் மக்கள்..!!!!
கோவை தெற்கு மாவட்டத்தில் ஆனைமலை அருகே அம்பராம்பாளையம் அமைந்துள்ளது இங்கு பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தின் நீர் ஏற்றும் நிலையும் அமைந்துள்ளது. இந்த நீரேற்றும் நிலையத்தில் டிசம்பர் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென குளோரின் வாயு கசியத் துவங்கியதாக கூறப்படுகிறது. மேலும் குளோரின் வாயு வாசத்தை அறிந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அறிந்து வந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகவேல் அவர்கள் சம்பவ இடத்தைப் பார்த்துவிட்டு நிலைமை சற்று மோசமாக இருந்ததால் இவர் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் வசந்தகுமார் இரண்டாம் நிலை காவலர் ஆனந்த் ஆகியோர் நீரேற்று நிலையத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு துறையினரும் வந்து போர்க்கால அடிப்படையில் சுண்ணாம்பு பொடி மூட்டை களை சுற்றிலும் அடுக்கி வைத்து தற்காலிகமாக விபத்து தடுப்பு பணி மேற்கொண்டனர். குளோரின் வாயு கசிவால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.