பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை!!
கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகள் வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.