கடந்த வெள்ளிக்கிழமை (09.12.2022) அன்று பெய்த மழையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை குன்றுகளில் உள்ள சின்னார் பதி பழங்குடியின வன கிராமத்தில் வாழுகிற K. மாயவன் என்பவரது வீடு இடிந்து விழுந்து விட்டது. நான்கு சிறு குழந்தைகளுடன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்த பின்பு கூட அவர்களின் உதவி இல்லாமல் விடிய விடிய இரவில் கடும் பனியிலும் மழையிலும், எவ்வித பாதுகாப்பு இன்றி உறக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறார்கள்,
இத்தோடு ஆழியாறு வன சோதனைச் சாவடி அருகில் இருக்கிற இந்த கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று விடிய விடிய நடமாட்டம் இருந்திருக்கிறது,,, கிராம மக்கள் அனைவரும் எப்போதும் போல அன்றைக்கும் விடிய விடிய கண்விழித்து காத்திருக்கிறார்கள்,,, தங்களது வாழ்வில் என்று விடியல் வருமோ என்று???…. தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனத்துறையின் அலட்சியப் போக்கு,,, கிராமத்திற்குள் யானை வருகிற விதத்தில் நடந்து கொள்வது மட்டுமல்ல,,,,, பாழடைந்த பயன்படுத்த முடியாத வீடுகளுக்குள் எத்தனை காலம் தான் பழங்குடிகள் வாழ்வார்கள்???
வனத்தை விட்டு வெளியேறுவார்களா? மாட்டார்களா?? என்பதையும் பார்ப்போம் என்கிற வகையில் வனத்துறை செயல்படுவது தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் விரும்புகிறதா??? சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்றும் உள்நாட்டில் அகதிகளாய் வாழ்கிற,,,,,,,
மண்ணையும், மலையையும், இயற்கையையும் பாதுகாத்து மண்ணில் வாழ்கிற உயிர்களுக்கு உயிர் வழங்குகிற பழங்குடிகளை பாதுகாப்பதற்கு பொது சமூகம் என்ன செய்யப் போகிறது??
என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் vs.பரமசிவம் அவர்கள் கேள்வி. நாளை வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.