கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் 24 வயதான பெண் ஊழியர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சொக்கம்பாளையம் காந்தி காலனியை சேர்ந்த 32 வயதான முருகசாமி என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். முருகசாமி குடிப் பழக்கத்திற்கு ஆளானவர். இவர் அடிக்கடி அந்த பெண் ஊழியரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் முருகசாமியை பெண் ஊழியர் வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகசாமி அந்த பெண் ஊழியர் பணிக்கு வரும் வழியில், செல்லும் வழியில் கண்டு தகாத வார்த்தைகள் பேசி தாக்க முற்பட்டுள்ளார். இதனால் நேற்று அந்த பெண் ஊழியர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் முருகசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.