கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 25 வயதான கார்குழலி, இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது குழந்தைகளை கார்குழலியின் தந்தை வீட்டில் இருந்து கவனித்து வருகிறார், இந்த நிலையில் நேற்று மதியம் கார்குழலி தனது மூன்றரை வயதுள்ள தனது இரண்டாவது மகனை அழைத்துக் கொண்டு வெளியில் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றார், ஆனால் வெகு நேரம் ஆகிய வீடு திரும்பவில்லை இதை தொடர்ந்து அவரது தந்தை முருகன் போத்தனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தனது மகனுடன் மாயமான கார்குழலியை தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.