மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளராக சாதிக் பாட்சா நியமனம்..!!
சென்னை மனிதநேய மக்கள் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்தவர் சாதிக் பாட்சா இவர் சிறு வயது முதல் இவர் சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்ட இவர் அரசியல், ஊடகம். சமூக சேவை, எனபல்வேறு துறைகளில் பணியாற்றினார்,
இவர் மனிதநேய மக்கள் கட்சியில் முக்கிய துறைகளில் முழு ஈடுபாடுடன் பணியாற்றியவர் மக்களிடத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை இலகுவாக கையாண்டு தீர்வு காண்பவர் இவர் தற்போது மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருப்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் அனைவரிடத்திலும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.