கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 22 நாட்களாக ஊதிய உயர்வு வேண்டி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டி குமரி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மூன்றாவது கட்ட போராட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் முகமது ராபி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஹபீஸ், தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் அமீர்கான் ,ஐயப்பன்,
\மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி, நாகர்கோவில் மாநகரச் செயலாளர் மாஹீண் இப்ராஹிம், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்!!
நாளைய வரலாறு
செய்திக்காக
ஹனீப்