கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது மீனாட்சிபுரம். இங்கு ரயில்வே நிலையம் உள்ளது. இவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்திற்கு தினமும் ரயில்கள் இயங்குகிறது. மேலும் மீனாட்சிபுரம் அருகே ரயில் பாதையில் சுமார் 29 வயது உடைய நபர் ரயிலில் அடிபட்டு டிசம்பர் 5ஆம் தேதி திங்கள் கிழமை காலையில் ரயில் பாதையில் உடல் கிடந்துள்ளது.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த ரயில்வேத்துறை போலீசார் சம்பவம் நடத்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இறந்த நபர் திவான்சாபுதூரைச் சார்ந்த சேகர் சுமார் 29 வயதுடைய இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.