ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப் டவுன் மற்றும் கோவை மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பாக ரோட்டா செக் 2022 என்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
கோவை மணியகாரன்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப் டவுன் மற்றும் கோவை மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பாக ரோட்டா செக் என்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப் டவுன் 27 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
அதே சமயம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் செஸ் அசோசியேசன் உடன் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப் டவுன் இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்கம் போட்டியை இரண்டாவது முறையாகத் துவங்கியுள்ளது. இப்போட்டியானது 12,15,18 வயது உடையவர்கள் மற்றும் ஓபன் என நான்கு பிரிவுகளாக பிரித்த இப்போட்டியில் 300க்கும் மேற்ப்பட மாணவ,மாணவிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
மற்றும் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நன்கொடை வழங்க இருப்பதாகவும் மேலும் 15 பெண்களுக்கு கூடுதலான பரிசுகள் வழங்கப்படும் என்று ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதில் தலைவர் சரவணன், யூத் சர்வீஸ் டைரக்டர் ரவிக்குமார்,ப்ராஜெக்ட் சேர்மன் விஜய்மணிகண்டன், செயலாளர் ஜானகிராம்,
chief அர்பிட்டர் வினோத்குமார், ஜாயிண்ட் செக்ரட்டரி விஜயராகவன், CDCA செகரட்டரி தனசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-சீனி போத்தனூர்.