வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!!
வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனைத் தொடந்து, 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.
மேலும் படிக்கவும் ↓
கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று வாகன சோதனையில் 281 பேர் மீது வழக்கு பதிவு.
https://nalaiyavaralaru.com/2022/12/கிறிஸ்துமஸ்-பண்டிகை-நேற்