3 வாரமாக குடிதண்ணீர் வராத அவல நிலை?? தேவிகுளம் அரசு குடியிருப்பு மக்கள் அவதி!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே தேவி குளம் புளோக் பஞ்சாயத்து பகுதியில் அமைந்திருக்கும் அரசு குடியிருப்பு பகுதிகளில் சுமார் மூன்று வார காலங்களாக தண்ணீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அங்கு சாலை அருகில் உள்ள மண்களை வெட்டி எடுத்து மாற்றும் பொழுது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய தேவிகுளம் பஞ்சாயத்தும மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் நிர்வாகமும் முன் வரவில்லை.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை பல கிலோமீட்டர் சென்று எடுத்து வந்து உபயோகப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேவிகுளம் பஞ்சாயத்து உடனடியாக இது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அலுவலக குடியிருப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்